×

திருச்செங்கோடு நகராட்சி சார்பில் நரிக்குறவர்களுக்கு மாஸ்க் வழங்கல்

திருச்செங்கோடு,  மார்ச் 20: திருச்செங்கோடு நகராட்சி சார்பில், புதிய பஸ் நிலைய பகுதிகளில்  ஆணையாளர் சையத்முஸ்தபா கமால் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை  நேற்று மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் மற்றும் பயணிகளிடம் கொரோனா வைரஸ் குறித்து விளக்கப்பட்டது.தொடர்ந்து பஸ் நிலையத்தில் ஊசி, பாசிமணி விற்பனை செய்து வந்த நரிக்குறவர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளை அழைத்து  வந்து, கொரோனா வைரஸ் பற்றி எடுத்துக்கூறப்பட்டது. வைரஸ் பரவாமல் தடுக்க கைகழுவும் முறை பற்றி செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. பின்னர்,  அவர்களுக்கு முக கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

வெளியூர்களில் இருந்து திருச்செங்கோடு பேருந்து நிலையத்துக்கு வந்த அனைத்து பஸ்களில் கிருமி  நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், கொரோனா பற்றிய துண்டுபிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழஙகப்பட்டன. நிகழ்ச்சியில் துப்புரவு அலுவலர் ஜான்ராஜா மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Tiruchengode Municipality ,
× RELATED தீயணைப்பு துறை சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பேரணி