×

சேந்தமங்கலம் அருகே மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

சேந்தமங்கலம், மார்ச் 20: நடுக்கோம்பையில் நடந்த திமுக தலைவர் பிறந்த நாள்  பொதுக்கூட்டத்தில், தேமுதிக, அதிமுகவை சேர்ந்தவர்கள், திமுகவில் இணைந்தனர். சேந்தமங்கலம்  ஊராட்சி ஒன்றியம் நடுக்கோம்பையில் ஒன்றிய திமுக சார்பில், மு.க. ஸ்டாலின்  பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர்  அசோக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏக்கள் பொன்னுசாமி, சரஸ்வதி  ஆகியோர் முன்னிலை வகித்தார்.  ஊராட்சி மன்ற தலைவர் அழகப்பன் வரவேற்று  பேசினார்.  இதில் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் கலந்து  கொண்டு திமுக கொடி ஏற்றி வைத்து பேசினார்.

இதையடுத்து ஒன்றிய தேமுதிக அவைத்தலைவர் ராஜ், நடுக்கோம்பை தேமுதிக ஊராட்சி செயலாளர் முருகேசன் மற்றும் அதிமுகவினர் 25 பேர், தங்களை திமுகவில்  இணைத்து கொண்டனர். அவர்களை மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில், சங்கர், ராணி, தனபாலன், கதிர்வேல், விஸ்வநாதன், கீதா வெங்கடேசன், திராவிட மணி, பிரபாகரன், குணசேகரன், கலாமணி,  அப்பு, விஜய பிரகாஷ், ராஜூ உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Senthamangalam ,
× RELATED திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்