×

திருச்செங்கோட்டில் போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர்

திருச்செங்கோடு, மார்ச் 20: நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், திருச்செங்கோடு நகரில் பணியாற்றி வரும் போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர் மற்றும் ஜூஸ் வழங்கும் பணியை டிஎஸ்பி சண்முகம் துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் சாலைகளில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு, கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில், நாள்தோறும் பழச்சாறு,  நீர்மோர் வழங்க எஸ்பி அருளரசு உத்தரவிட்டார்.

இதையடுத்து திருச்செங்கோட்டில் போக்குவரத்து போலீசாருக்கு ஜூஸ் மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திருச்செங்கோடு டிஎஸ்பி சண்முகம் கலந்துகொண்டு போக்குவரத்து போலீசாருக்கு நீர்மேர், ஜூஸ் வழங்கும் பணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு டவுன் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

Tags : Tiruchengode ,
× RELATED போக்குவரத்து போலீசாரை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல்