×

ஏ. இறையமங்கலத்தில் காவிரி குறுக்கே தடுப்பணை

திருச்செங்கோடு, மார்ச் 20:  திருச்செங்கோடு அடுத்த ஏ.இறையமங்கலம் கிராத்தில் காவிரி  ஆற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணை மற்றும் படித்துறை கட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில், திருச்செங்கோடு தாலுகா  ஏ.இறையமங்கலம் கிராமத்தில் காவிரி ஆற்றுப்படுகை பகுதியில் தடுப்பணை  மற்றும் படித்துறை அமைக்குமாறு, பொன். சரஸ்வதி எம்எல்ஏ கோரிக்கை வைத்தார்.  அதனை ஏற்று  காவிரியின் குறுக்கே புதிதாக தடுப்பணை மற்றும் படித்துறை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில்  பேசிய திருச்செங்கோடு எம்எல்ஏ பொன்.சரஸ்வதி, முதல்வசர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம்,  மின்துறை அமைச்சர்  தங்கமணி  ஆகியோருக்கு, திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் சார்பாக நன்றியை தெரிவித்தார்.

Tags : crossing ,C. Cauvery ,
× RELATED ஆபத்தான முறையில் தண்டவாளம் கடப்பதை...