×

குண்டர் சட்டத்தில் சேலம் வாலிபர் கைது

கிருஷ்ணகிரி, மார்ச் 20: பர்கூரில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த சேலம் வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். பர்கூர் பகுதியில் தொடர் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சேலம் அன்னதானப்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த ராமு மகன் தன்ராஜ்(34) என்பவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்நிலையில், அவர் தொடர்ந்து வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதுடன் பர்கூர், கல்லாவி மற்றும் தர்மபுரி ஆகிய காவல்நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.

எனவே, அவரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க எஸ்.பி. பண்டி கங்காதர், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி, கலெக்டர் பிரபாகர், தன்ராஜை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, ஓசூர் கிளை சிறையில் இருந்த  தன்ராஜிடம் அதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. இதையடுத்து, அவர் சேலம் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

Tags : Salem ,
× RELATED சேலம் உருக்காலை தொழிலாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்