×

வலிப்பு நோயால் 5 வயது குழந்தை சாவு

கிருஷ்ணகிரி, மார்ச் 20: கிருஷ்ணகிரி பழையபேட்டை பூக்கார தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு 5வயதில் அக்‌ஷயா என்ற குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களாக குழந்தை அக்‌ஷயா வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வந்தார். இதற்காக பல இடங்களில் சிகிச்சையளித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 17ம் தேதி இரவு வழக்கம்போல் அனைவரும் தூங்கச் சென்றனர். மறுநாள் காலை வெகுநேரமாகியும் சத்யா எழுந்திருக்கவில்லை.

இதனால், பெற்றோர் அருகில் சென்று பார்த்தபோது அவர் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர். நள்ளிரவு நேரத்தில் வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை கவனிக்காததால் அக்‌ஷயா பரிதாபமாக உயிரிழந்திருப்பதை எண்ணி கதறி அழுதனர். இதுகுறித்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொ) கணேஷ்குமார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Tags :
× RELATED கொரோனா காலத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு