×

நெய்வேலி நகர பகுதியில் இரவு 7 மணிக்குள் கடைகளை மூட என்எல்சி நகர நிர்வாகம் நடவடிக்கை

நெய்வேலி, மார்ச் 20: நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 15,000க்கும் மேற்பட்ட என்எல்சி அதிகாரிகள், பொறியாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.இங்குள்ள என்எல்சி நிறுவனத்திற்கு சொந்தமான குடியிருப்புகளில் என்எல்சி ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் வசித்து வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் நெய்வேலி நகர பகுதியில் உள்ள சிறுவர் விளையாட்டு பூங்காக்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட இடங்களை நெய்வேலி என்எல்சி நகர நிர்வாகம் வரும் 31ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் கூடும் இடமான நெய்வேலி மெயின் பஜார், சூப்பர் பஜார், மக்கள் கூடும் இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு 7 மணிக்குள் கடைகளை அடைக்க என்எல்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.மேலும் நகரில் மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு வருகிறது. இதனால் என்எல்சி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் மாலை 6 மணிக்கு மேல்  வெளியே வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : NLC ,city administration ,Neyveli ,shops ,
× RELATED நெய்வேலி என்.எல்.சி-யில் நிகழ்ந்த...