×

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு

விருத்தாசலம், மார்ச் 20: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், நேற்று பெண்ணாடத்தில் விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன்குமார்  கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பெண்ணாடம் பேரூராட்சியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மற்றும் பெண்ணாடம் பழைய பேருந்து நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்து நிலையத்தில் கூட்டமாக அமர்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் ஒருவருடன் ஒருவர் உரசிக்கொண்டு அமரக்கூடாது, இருமலின்போது கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும். என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிக்க அறிவுறுத்தினார். மேலும் பொது இடங்களில் கூடி இருந்த பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் பரவுவது சம்பந்தமாக விழிப்புணர்வு பெற்றுள்ளனரா என கேட்டறிந்தார். மேலும் பொதுமக்கள் கூட்டம் அதிகம் வரும் டீக்கடை, உணவுக் கடைகளில் பாத்திரங்கள் மற்றும் அதனை தயார் செய்பவர்களும் மிகுந்த கவனத்துடனும் சுத்தமாகவும் இருக்கும்படி அறிவுறுத்தினார்.

Tags :
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...