×

கடலூர் மாவட்ட எஸ்பியிடம் விடுதலை சிறுத்தைகள் மனு

கடலூர், மார்ச் 20: கடலூர் எஸ்பியிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் நாடாளு மன்ற தொகுதி செயலாளர் தாமரை செல்வன் தலைமையில் மனு வழங்கப்பட்டது.  அதில், குள்ளஞ்சாவடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புலியூர் கிராமத்தில் கடந்த 11ம் தேதி பாட்டு கச்சேரி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது புலியூர் காலனி மக்கள் ஒரு சிலருக்கும் குள்ளஞ்சாவடி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஆனது. இதன் அடிப்படையில் குள்ளஞ்சாவடி  காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் . மேலும் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தினர் தினந்தோறும் காலனிக்குள் புகுந்து மிரட்டி வருகிறார்கள்.  தொடர்ந்து அனைவரையும் கைது செய்வோம் என மிரட்டுகிறார்கள். எனவே  மாவட்ட எஸ்பி  கிராமத்தில் அமைதியை ஏற்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாநில துணை செயலாளர் தர், மாவட்ட அமைப்பாளர்  விடுதலை ராஜ்குமார், ஜெயசீலன், ஆகாஷ், பாரதிராஜா உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags : release ,SP ,Cuddalore District ,
× RELATED சிறைக்காலம் முன் கூட்டியே...