கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

நெல்லிக்குப்பம், மார்ச் 20:  நெல்லிக்குப்பம் நகராட்சியில் கொரோனா வைரஸ் நோய் குறித்து பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.  நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் கொரோனா வைரஸ் நோய் குறித்து பாதுகாப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடந்தது. நகராட்சி ஆணையர் பிரபாகரன் தலைமை தாங்கினார். உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்றார். நகராட்சி பொறியாளர் சிவசங்கரன், துப்புரவு அலுவலர் சக்திவேல், வருவாய்த்துறை தனி தாசில்தார் தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி பகுதியில் உள்ள மளிகை கடை மற்றும் ஓட்டல்களுக்கு வருபவர் களின் கைகளை சுத்தமாக கை கழுவி விட்டு வரவேண்டும் என கூறி அறிவுறுத்த வேண்டும். மேலும் கடைகளின் முன்பு கை கழுவுவதற்கான, சோப்பு, தண்ணீர் வைக்க வேண்டும்.ஆலை நிர்வாகத்தினர்களும் பணிக்கு வருபவர்களின் கையை கழுவிவிட்டு வர உரிய ஏற்பாடுகள் செய்து தர வேண்டும். இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் நாமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சளி, இருமல் மற்றும் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என ஆணையர் பிரபாகரன் விளக்கி கூறினார். கூட்டத்தில் வர்த்தக சங்க தலைவர் நாசர்அலி, செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் சம்சுதீன், மாவட்ட இணை செயலாளர் சுரேஷ், இ.ஐ.டி பாரி அதிகாரி கவுரிசங்கர், லோட்டே மிட்டாய் ஆலை அதிகாரி முருகன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், ஓட்டல் உரிமையாளர், வர்த்தக சங்க நிர்வாகிகள், ஆலை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: