×

பள்ளிவாசல், ஆலயங்கள், கோயில்களில் கிருமிநாசினி தெளிப்பு பணி தீவிரம்

காட்டுமன்னார்கோவில், மார்ச் 20: காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை பேரூராட்சியில் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி செயல் அலுவலர் ஜேம்ஸ்டிசாமி தலைமையில் அதிகஅளவில் பொதுமக்கள் வந்து போகும் இடங்களான பேருந்துநிறுத்தம், கடைவீதி, மசூதி, வங்கி மற்றும் அலுவலகங்கள் உள்ள தெருக்கள் உள்ளிட்ட அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு பிளீச்சிங்பவுடர் தெளிக்கப்பட்டது. மேலும் அக்கட்டிடங்களின் டைல்ஸ்சுவர் மற்றும் தரைகளை லைசால் கலவையை ஸ்பிரே செய்து, சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது.கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக லால்பேட்டை பேரூராட்சியில் வங்கிகளின் மேலாளர்களை சந்தித்து அதிக மக்கள் பயன்படுத்தும் மற்றும் கைவைக்கும் இடங்களையும் லைசால்கலவை கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்ய அறிவுறுத்தியும் ஏடிஎம் மெஷின்களில் அதிக கைவைக்கும் இடங்களையும் அவ்வபோது லைசால் கலவை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

 மேலும் பணம் மற்றும் சில்லரைகளை கையாளும் பணியாளர்களை அவ்வப்போது சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. முஸ்லிம்ஜமா அத்தலைவர், உறுப்பினர்கள் மற்றும் முத்தவல்லி அனைவரையும் சந்தித்து கொரோனா வைரஸ்விழிப்புணர்வுக்காக மசூதிகள் மற்றும் அவர்கள் வீடுகளையும் பராமரிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் அறிவுரைகளை எடுத்துக்கூறி அனைவரும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.

Tags : schools ,temples ,
× RELATED கொண்டாநகரத்தில் கூட்டுக்குடிநீர்...