2 பெண்கள் தற்கொலை

விக்கிரவாண்டி, மார்ச் 20: விக்கிரவாண்டி  அடுத்த கணபதிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நவநீதம் (69). இவர் அடிக்கடி  தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த 17ம் தேதி தலைவலி தாங்க முடியாமல்  துடித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் நிலத்திற்கு தெளிக்க வாங்கி  வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். இதனைப் பார்த்து  அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நவநீதம் இறந்தார் . மற்றொரு சம்பவம்: விக்கிரவாண்டி அடுத்த தொரவியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு மகள் அருள்சக்தி (23), இவர் அதே பகுதியை சேர்ந்த சத்தியராஜ் (27) என்பவரை காதலித்து 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லக்ஷிதா  (5), கவின் (3) என்ற இரு குழந்தைகள் உள்ளனர் . மனைவியிடம்  அடிக்கடி பணம் கேட்டு சத்தியராஜ் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 18ம்தேதி அருள்சக்தி  வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், மருமகன் சத்தியராஜ், மாமியார்  அம்மச்சி, மருமகனின் தம்பி ஆகாஷ், உறவினர்  மூர்த்தி ஆகியோர் மீது அருள்சக்தியின் பெற்றோர் புகார்  கொடுத்ததின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து ஆர்டிஓ   விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

Related Stories:

>