இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு

உளுந்தூர்பேட்டை,  மார்ச் 20: உளுந்தூர்பேட்டை பேரூராட்சி உளுந்தாண்டார்கோயில் பகுதியை  சேர்ந்த ஏழுமலை மகன் வெங்கடேசன்(39). இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள  நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக உள்ளார்.  இந்நிலையில் சம்பவத்தன்று இவர் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது அங்கு வந்த  கேசவன் மகன் பிரேம்குமார்(22), அவருடன் வந்த பரந்தாமன், சங்கு என்கிற  சங்கர்(55) ஆகிய 3 பேரும் சேர்ந்து கடந்த ஆண்டு அங்காளம்மன் கோயில்  திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக இருந்த முன்விரோதத்தில்  அசிங்கமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம்  குறித்து உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் வெங்கடேசன் கொடுத்த புகாரின்  பேரில் சப்இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் 3 பேர் மீதும் வழக்கு பதிந்து அதில்  பிரேம்குமார், சங்கர் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இதே பிரச்னை  தொடர்பாக கேசவன் மனைவி பெரம்பாயி(55) என்பவர் கொடுத்த மற்றொரு புகாரின்  பேரில் திருப்பதி, பசுபதி, குணசேகரன், முருகன், மாலா உள்ளிட்ட 5 பேர் மீது  வழக்கு பதிந்து அதில் திருப்பதி மற்றும் பசுபதி ஆகிய இரண்டு பேர் கைது  செய்யப்பட்டனர்.

Advertising
Advertising

Related Stories: