×

நடுரோட்டில் கேரம் விளையாடியதை தட்டிக்கேட்ட வியாபாரிக்கு கத்திக்குத்து

பாகூர், மார்ச் 20: பாகூர் அருகே நடுரோட்டில் கேரம் விளையாடியதை தட்டிக்கேட்ட சிக்கன் சென்டர் உரிமையாளரை கத்தியால் குத்தி கொலைமிரட்டல் விடுத்த ரவுடி உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். பாகூர் அடுத்த கன்னியக்கோவில் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் தேவா என்கிற தேவநாதன் (33). இவர் கன்னியகோவிலில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர், அங்கு வந்து கொண்டிருந்தபோது சாலையின் நடுவே அதே பகுதியை சேர்ந்த ரவுடி ஜப்பான் என்கிற அருள்ராஜ், அன்பு என்கிற அன்பரசன் உள்ளிட்ட 4 பேர் கேரம் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது தேவா, ஏன் ரோட்டின் நடுவே கேரம் விளையாடி கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.அப்போது ரவுடி ஜப்பான் கையில் வைத்திருந்த பேனா கத்தியால் தேவாவின் தாடையிலும், காது பகுதியிலும் குத்தியுள்ளார். அன்பரசனும் சேர்ந்து தாக்கி உள்ளார். மேலும் 2 நாளில் உன்னை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த தேவா, கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்த புகாரின்பேரில் ரவுடி ஜப்பான் என்கிற அருள்ராஜ், அன்பு என்கிற அன்பரசன் உள்ளிட்ட 4 பேர் மீதும் கிருமாம்பாக்கம் ஏட்டு லூர்துநாதன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : dealer ,carrom game ,
× RELATED கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு...