கொரோனா வைரஸ் எதிரொலி பாதுகாப்பான முறையில் கட்டிங், சேவிங்

தாராபுரம்.மார்ச் 20: தாராபுரத்தில் ஹேர் டிரஸர்ஸ் யூனியன், சவரத் தொழிலாளர் சங்கத்தின் அவசர கூட்டம் சங்க தலைவர் பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. செயலாளர் கண்ணன், பொருளாளர் நாட்டுதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உலகையே அச்சுறுத்தி வரும் கெரேனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை பற்றியும் சிகை அலங்காரம் செய்ய வரும்பொது மக்களுடன் நெருக்கமாக நின்று தொழில் செய்யும் சவரத் தொழிலாளர்கள் வாடிக்கையாளர் நலனையும் தங்கள் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வருமாறு:  சிகை அலங்கார நிலையங்களுக்கு தினசரி ஐந்து முறை கிருமி நாசினி மருந்துகளை அடித்து கிருமி தொற்றை தடுக்க நடவடிக்கை எடுப்பது, வாடிக்கையாளர்களுக்கு கிருமி நீக்கம் செய்யப்பட்ட மேல் துண்டு, முகம் துடைக்கும் டவல்களை அணிவித்த பின்பு முகச்சவரம் செய்வது, முகச்சவரம் மற்றும் முடி திருத்தும் பணிகளுக்காக பயன்படுத்தும் தொழில் கருவிகளை ஒருவருக்கு பயன்படுத்திய பின் மற்றவருக்கு கிருமி நீக்கம் செய்த பின்பே பயன்படுத்துவது.  கிருமித்தொற்று அறிகுறிகளான தொடர் இருமல், சளி இவற்றுடன் சிகையலங்கார நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வைரஸ் பற்றிய தகவல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவரை மருத்துவ பாதுகாப்புடன் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆவண செய்வது. இவற்றில் அசௌகரிய குறைவு ஏற்படும் சங்க உறுப்பினர்களின் சிகையலங்கார நிலையங்களை அரசு அறிவித்துள்ள காலக்கெடு வரை விடுமுறை விட்டு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன

Related Stories:

>