காங்கயத்தில் வாட்டர் ஏ.டி.எம். பழுது

காங்கயம், மார்ச் 20:  காங்கயம் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்க, தனியார் பங்களிப்புடன் 3 இடத்தில்  வாட்டர் ஏ.டி.எம். துவக்கப்பட்டது. இந்த மையத்தின் மூலம் ரூ.7க்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை 24 மணி நேரமும் பெறலாம். மேலும் ஒரு ரூபாய் நாணயம் செலுத்தி, 1 லிட்டர் தண்ணீரையும் பெறலாம்.இதில் காங்கயம் தாராபுரம் ரோடு, அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டி வளாகத்தில் வாட்டர் ஏ.டி.எம். மையம் உள்ளது. இதை பயன்படுத்தி இப்பகுதி மக்கள் தண்ணீர் பெற்று வந்தனர். இந்நிலையில் இந்த மையம் கடந்த 15 நாட்களாக பழுதடைந்துள்ளது.  அவுட் ஆப் சர்வீஸ் என எழுதி ஒட்டப்பட்டுள்ளது.

இது குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது: 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேன் குடிநீர் ரூ.35 முதல் ரூ.40 வரை தனியார் நிறுவனங்கள் மூலம் விற்கப்பட்டு வருகிறது. நகராட்சியில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தால், 20 லிட்டர் தண்ணீர் ரூ.7க்கும் கிடைக்கிறது. இந்த மையம் கடந்த 15 நாட்களாக செயல்படவில்லை. இதனால் அதிக விலை கொடுத்து குடிநீர் வாங்க வேண்டியுள்ளது.  உடனடியாக பழுதை சரிசெய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தனர்.

Related Stories: