×

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி குன்னூரில் 20 லட்சம் கிலோ தேயிலைத்தூள் தேக்கம்

குன்னூர், மார்ச் 20:  கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக குன்னூரில் ரூ.14 கோடி மதிப்பிலான 20 லட்சம் கிலோ தேயிலைத்தூள் தேக்கமடைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள் குன்னூர், கோவை, கொச்சின் போன்ற பகுதிகளில் உள்ள ஏல மையங்கள் மூலம் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் எதிரொலியாக தேயிலை தூளை கொண்டு செல்ல முடியாது என்பதால் வெளி நாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் இம்மாதத்திற்கான ஏலத்தில் வர்த்தகர்கள் கலந்துக்கொள்ளவில்லை. இதன் காரணமாக குன்னூரில் ரூ.20 லட்சம் கிலோ தேயிலைத்தூள் தேக்கமடைந்துள்ளதாக தேயிலை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தேயிலை வர்த்தகர் ஒருவர் கூறுகையில், தேயிலை விவசாயத்தை நம்பி மாவட்டத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் உள்ளனர்.இங்கு தயாரிக்கப்படும் தேயிலைத்தூள் குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் மாதந்தோறும்  ஏலம் விடப்பட்டு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.  தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இம்மாதத்திற்கான ஏலம் குன்னூரில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் தேயிலைத் தூள் ஏலம் போகாமல் 14 கோடி ரூபாய் மதிப்பிலான 20 லட்சம் கிலோ தேயிலைத்தூள் குன்னூர் குடோன்களில் தேக்கமடைந்துள்ளது. நீலகிரி தேயிலை ஆலை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், என்றார்.

Tags : Corona ,Coonoor ,
× RELATED கொரோனா மிரட்டல் தீபாவளி விற்பனை...