×

போலீசாருக்கு கொரோனா விழிப்புணர்வு

ஊட்டி, மார்ச் 20: கொேரானா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் நீலகிரி காவல்துறை சார்பில் அனைத்து பிரிவுகளில் பணியாற்றும் காவலர்களுக்கு முககவசம், சோப்புகள், கை கழுவும் கிரிமி நாசினி உட்பட பல்வேறு  பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் தடுக்க அதிகளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீசார் போக்குவரத்து சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் கட்டாயம் ஈடுபட வேண்டியுள்ளது. இந்நிலையில், இவர்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க போலீஸ் உயரதிகாரிகள் பல்ேவறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், நீலகிரி காவல்துறையில் பணியாற்றும் அனைத்துத்துறை போலீசாருக்கும் முககவசம், சோப்புகள், கை கழுவும் கிருமி நாசினி உட்பட பல்வேறு  பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர காவலர்களின் குடும்பங்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நேற்று ஊட்டி ஜி1 காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு கை கழுவுவதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

Tags : Corona ,
× RELATED மீண்டும் துவங்கியது `பரேடு’ கொரோனா அச்சத்தில் மதுரை போலீசார்