×

பந்தலூர் அருகே வனப்பகுதியில் தீ மரங்கள் எரிந்து நாசம்

பந்தலூர், மார்ச் 20 : பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரகம் பகுதியில் வனப்பகுதியில் தீ ஏற்பட்டு பல ஏக்கர் நாசமானது.  பந்தலூர் பொன்னானி அருகே அம்மங்காவு மற்றும் பந்தபிளா வனப்பகுதியில் நேற்று தீ பிடித்து பரவதொடங்கியது. இதில் வன உயிரினங்கள், அரியவகை  மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து சேதமாகின. வனத்துறையினர் வனப்பகுதியில் தீதடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தாலும் சில சமூக விரோதிகள் தீ வைப்பதால் வனத்தில் தீ விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது.  வனப்பகுதியில் தீ வைப்பவர்கள் குறித்து தெரியவந்தால் வனத்துறை சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : forest area ,Bandalur ,
× RELATED குன்றத்தூர் அருகே பரபரப்பு பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து