கோவை ரயில்நிலையத்தில் நிலவேம்பு கசாயம் வினியோகம்

கோவை, மார்ச் 20:  கோவை மலுமிச்சம்பட்டி  நாகசக்தி அம்மன் பீடம் மற்றும்  எஸ்.ஆர்.எம்.யூ இணைந்து கோவை ரயில்நிலையத்தில் கொரோனோ வைரஸை தடுக்கும் பார்முலா 2 நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு சித்தர் சிவசண்முக சுந்தரம் பாபுஜி சுவாமிகள் தலைமை வகித்தார். எஸ்.ஆர்.எம்.யு சேலம் கோட்ட செயலாளர் கோவிந்தன், கோவை கிளை தலைமை செயலாளர் ஜான், டாக்டர் ரமேஷ், மகேஷ் விஸ்வ ஜன முன்னேற்ற கழக நிறுவனர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ரயில்நிலையத்தில் இருந்த பயணிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.  மேலும், கொரோனா குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில், நாகசக்தி அம்மன் கோயில் நிர்வாகிகள் கணேஷ்குமார், முருகன், குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். இது குறித்து சித்தர் சுவசண்முக சுந்தரம் பாபுஜி சாமிகள் கூறுகையில், ‘‘உலகை பயமுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. நமது உடம்பில் போதுமான அளவு எதிர்ப்பு சக்தி இருந்தால் எந்தவிதமான விஷகாய்ச்சலும் நமக்கு வராது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முதல் கட்டமாக கோவை ரயில்நிலையத்தில் 10 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி வருகிறோம். மேலும் தமிழகம் முழுவதும் 5 லட்சம் பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படும்,’’ என்றார்.

Related Stories: