×

புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 20: திருத்துறைப்பூண்டியில் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலைய அனுகு சாலையில் இருந்து வேதை சாலை வரை ஒரே சாலை தான் உள்ளது. இந்த சாலையில் இருந்துதான் மன்னார்குடி, நாகப்பட்டினம், வேதாரண்யம், பட்டுக்கோட்டை போன்ற ஊர்களுக்கு செல்லும் நெடுஞ்சாலைகள் உள்ளது. மேலும் இந்த சாலையில் நகராட்சி தெரு சாலைகளும் பிரிகிறது. இந்த ஒரே சாலையில் ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் பெரிது பாதிக்கபடுகின்றனர். சாலை இருபுறமும் வர்த்தக விளம்பர பலகைகள் மேலும் எந்த நேரமும் வாகனங்களில் பொருட்கள் ஏற்றுவது, இறக்குவதுதால் தினதோறும் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட போக முடியாது. ஆண்டுக்கு ஒரு முறை ஆக்கிமிப்பு அகற்றபடும். பின்னர் ஒரு மாதத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு தொடங்கி விடும். இந்த நிலையில் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வேதை சாலை முள்ளியாறு பாலம் அருகே நேற்று நெரிசல் ஏற்பட்டு ஒருபுறம் ஆம்புலன்ஸ்,மறுபுறம் போலீஸ் ரோந்து வாகனம் சிக்கி கொண்டது. இதனால் பொதுமக்களும் அரை மணி நேரம் பாதிக்கபட்டனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.

Tags : bus station ,
× RELATED சென்னையில் பெய்த கனமழையால் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்