×

தி.பூண்டி ஊராட்சி பகுதியில் நோய் தொற்று விழிப்புணர்வு பணி

திருத்துறைப்பூண்டி, மார்ச் 20: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு பணிகள் குறித்து ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஆணையர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், ஒன்றிய ஆணையர்கள் சுப்பிரமணியன், தமிழ்ச்செல்வம் மற்றும் அலுவலர்கள் கொருக்கை ஊராட்சி தலைகாடு பகுதிகளில் உள்ள மீன், இறைச்சி கடைகளில் கிருமிநாசினி தெளித்து கொரோனா முன்னெச்சரிகை நடவடிக்கை பணிகளை ஆய்வு செய்தனர். பின்னர் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் ஊராட்சி கோவில்தோப்பு பகுதியில் 100 நாள் வேலை திட்டபணியாளர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார்கள் பின்னர் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு கூட்டத்தில் ஆலத்தம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் கவுரி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். இதில் ஊராட்சி தலைவர் பழனி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Bundi Panchayat ,
× RELATED தி.பூண்டி ஊராட்சி பகுதியில் நோய் தொற்று விழிப்புணர்வு பணி