×

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புத்தகம் வாசிப்பு இயக்கம்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 20: திருத்துறைப்பூண்டி நகராட்சி 18 வது வார்டு சிங்களாந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளையின் சார்பில் நடைபெற்ற வாசிப்பு இயக்கத்தில் கம்யூனிஸ்ட் அறிக்கை புத்தகம் வாசிக்கப்பட்டது. இதில் கட்சியின் நகர செயலாளர் ரகுராமன், மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்ரமணியன், சாமிநாதன், நகரக் குழு உறுப்பினர் ஜெயப்பிரகாஷ், கிளை செயலாளர் விஸ்வநாதன், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும் கட்சியின் பத்து கிளைகளில் வாசிப்பு இயக்கம் நடைபெற்றது.

Tags : Marxist Communist Party ,
× RELATED மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில...