×

பைக் மோதி வாலிபர் சாவு

மன்னார்குடி, மார்ச் 20: திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் காவல் சரகத்திற்குட்பட்ட கெழுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சரவணன் (29), ராமச்சந்திரன் (50). இருவரும் விவசாய கூலித் தொழிலாளர்கள். இந்நிலையில் இருவரும் நேற்று காலை கெழுவத்தூரில் இருந்து பாலையூர் நோக்கி ஹோட்டலில் டிபன் வாங்குவதற்காக பைக்கில் சென்றனர். பைக்கை சரவணன் ஓட்டினார். ராமச்சந்திரன் பின்னால் அமர்ந்து சென்றார். பைக் பாலையூர் அருகே சென்றபோது நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த ஆலமரத்தில் மோதியது. இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராமச்சந்திரன் படுகாயமடைந்தார். அவ்வழியே வந்த சிலர் ராமச்சந்திரனை மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருகவாழ்ந்தான் போலீசார் சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் ஹேமலதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : death ,
× RELATED பைக்கில் தவறி விழுந்து சிகிச்சை பெற்ற வாலிபர் பலி