×

கீழ்பென்னாத்தூர் அருகே பாதுகாப்பற்ற நிலையில் நெல் மூட்டைகள் கூடுதல் மையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

கீழ்பென்னாத்தூர், மார்ச் 20: கீழ்பென்னாத்தூர் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் மையத்தில் பாதுகாப்பற்ற நிலையில் நெல் மூட்டைகள் வைக்கப்படுகின்றன. எனவே, கூடுதல் மையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழ்பென்னாத்தூர் அடுத்த கருங்காலிகுப்பம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் உள்ளது. இங்க கீழ்பென்னாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விதைத்த நெல்களை நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில், கொள்முதல் நிலையம் சாலை அருகே அமைந்துள்ளதால், நெல்மூட்டைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. மேலும், கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் ஒரே ஒரு நெல் கொள்முதல் மையம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதனால், தொலைவில் இருந்து வரும் விவசாயிகள் தாங்கள் கொண்டு வரும் நெல் மூட்டைகளுடன் பல மணி நேரம் காத்திருந்து விற்பனை செய்யும் நிலை உள்ளது. அவ்வாறு, விற்பனைக்கு கொண்டு வரும் நெல் மூட்டைகள் பாதுகாப்பற்ற நிலையில் சாலையில் அருகே வைக்கப்படுகிறது. எனவே, கீழ்பென்னாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கூடுதலாக தற்காலிக நேரடி நெல் கொள்முதல் மையங்கள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழ்பென்னாத்தூர் அடுத்த கருங்காலிகுப்பம் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பாதுகாப்பற்ற நிலையில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்.

Tags : Keezpennathur ,
× RELATED மயிலாடுதுறை பகுதிகளில் 30 ஆயிரம் டன்...