×

தண்டராம்பட்டு அருகே நீர்வரத்து கால்வாய் சீரமைக்கும் பணி துவக்கம்

தண்டராம்பட்டு, மார்ச் 20: தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி ஊராட்சியில் ₹4.50 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கோணமலை நீர்வரத்து கால்வாய், குளத்துமேடு தெருவில் உள்ள கங்கை அம்மன் கோயில் குளம் தூர்வாரும் பணியை நேற்று முன்தினம் ஊராட்சி மன்ற தலைவர் அலமேலு விஜயன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராயர் துவக்கி வைத்தனர், இதில் 100 நாள் ேவலை திட்ட தொழிலாளர்கள் குளம் மற்றும் நீர்வரத்து கால்வாய் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதை ஊராட்சி செயலாளர் ஆதாம் பாஷா பார்வையிட்டார். தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி கங்கை அம்மன் கோயில் குளத்தை 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சீரமைக்கும் பணி தொடங்கியது.

Tags : Commencement ,Dandarambattu ,water canal ,
× RELATED தலையாட்டிமந்து பகுதியில் இன்டர்லாக் கற்கள் அமைக்கும் பணி துவக்கம்