×

போளூர் ஒன்றியத்தில் 40 ஊராட்சிகளில் உள்ள பழுதடைந்த அரசு கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்

போளூர், மார்ச் 20: போளூர் ஒன்றியத்தில் 40 ஊராட்சிகளில் உள்ள பழுதடைந்த அரசு பள்ளி உள்ளிட்ட அனைத்து அரசு கட்டிடங்கனையும் சீரமைக்க ஒன்றிய குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போளூர் ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் பெ.சாந்தி பெருமாள் தலைமை தாங்கினார் துணை தலைவர் ஆ.மிசியம்மாள் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் அ.அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ஆ.சம்பத் வரவேற்றார். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: போளூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ₹1.29 கோடி மதிப்பீட்டில் குடிநீர் விஸ்தரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒன்றிய பொது நிதி திட்டம் மூலம் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், கட்டிப்பூண்டி, கல்வாசல், ஏந்துவாம்பாடி, மங்களாபுரம், புஷ்பகிரி காலனி, வெண்மணி, ரெண்டேரிப்பட்டு ஆகிய இடங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள 7 குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை ₹6.76 லட்சத்தில் இடித்து அப்புறப்படுத்த வேண்டும். 40 கிராம ஊராட்சிகளில் மிகவும் பழுதடைந்துள்ள அரசு பள்ளி கட்டிடங்கள், அங்கன்வாடி, கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவற்றை புதுப்பித்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக களம்பூர் வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.சுந்தர் கலந்து கொண்டு கொரோனா வைரஸ் தடுப்பு முறைகள் குறித்து விளக்கி கூறினார். மேலும், கை கழுவும் முறைகள் குறித்தும் பயிற்சி அளித்தார்.இதில் இன்ஜினியர்கள் க.குமார், ஆர்.சசிகுமார் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மு.மனோகரன், ராஜாகுமாரி கருணாநிதி, மாலினி வினோத் திவாகரன் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ந.நாராயணன் நன்றி கூறினார். போளூர் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் பெ.சாந்தி பெருமாள் தலைமையில் நேற்று நடந்தது

Tags : Reorganization ,state buildings ,Polur Union ,
× RELATED மணிப்பூர், திரிபுரா, மேகாலயா மாநிலங்கள் உருவான நாள்: பிரதமர் மோடி வாழ்த்து