×

மெக்டோனால்ட்ஸ் சாலையில் அச்சுறுத்தும் மெகா பள்ளம் அடிக்கடி விபத்துகள் அரங்கேறும் அவலம்

திருச்சி, மார்ச் 19: திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே மெக்டொனால்ட்ஸ் சாலை பெயர்ந்து ெமகா பள்ளம் விழுந்துள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். இதேபோல பழைய சிறைச்சாலை சாலை முழுவதும் குண்டும், குழியுமாக சேதமடைந்துள்ளது. திருச்சியில் இதுபோன்று பல சாலைகள் சேதமடைந்துள்ளதால் வாகன ஒட்டிகள் சாலைகளை கடந்து செல்ல மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் இந்த சாலை பள்ளங்களில் விழுந்து காயமடைவது வாடிக்கையாக உள்ளது. இதுதவிர டூவீலர்கள் மற்றும் அனைத்து வாகனங்களின் டயர்களை இந்த சாலை பள்ளங்கள் பதம் பார்த்து விடுகிறது. மேலும் சிறு விபத்துகளும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. மத்திய பஸ் நிலையம் அருகேயுள்ள மெக்டொனால்ட்ஸ் சாலையில் இரவு நேரத்தில் மெகா பள்ளம் தெரியாமல் டூவீலரில் இருந்து விழுந்து வாகனஓட்டிகள் பலர் காயமடைந்துள்ளதாக அப்பகுதியில் கடை வைத்திப்பவர்கள் தெரிவித்தனர்.இது குறித்து பகுதி மக்கள் மற்றும் வாகனஓட்டிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் இதுவரை சாலை பள்ளங்கள் சீரமைக்கப்படவில்லை. எனவே சம்மந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலை பள்ளங்களை சீரமைத்து போக்குவரத்திற்கு ஏற்படும் இடையூறை தடுக்க வேண்டும் என்பதே வாகனஓட்டிகளின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : accidents ,McDonald's Road ,
× RELATED தொளவேடு கிராமத்தில் குண்டும்...