மலேசிய பயணிகள் காத்திருப்பு அதிகாரிகள் கலந்தாலோசிக்க முடிவு

திருச்சி, மார்ச் 19: கொரோனா வைரஸ் பீதியால் திருச்சியில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் மலிண்டோ, ஏர் ஏசியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தினமும் காலை, மாலை இருவேளை ஏர் ஏசியாவும், 3 வேளை இயக்கப்படும் மலிண்டாவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் ஏர்ஏசியாவில் மலேசியா செல்வதற்காக டிக்கெட் புக் செய்த மலேசியா நாட்டு பயணிகள் 70 பேர் கடந்த 11ம் தேதி முதல் திருச்சி விமான நிலையம் வந்து செல்கின்றனர். பயணிகளிடம் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது என நிர்வாகம் தரப்பில் ஊழியர்கள் கூறினர். இருப்பினும், மாற்று ஏற்பாடு செய்யப்படும் என கூறியதை அடுத்து பயணிகள் கடந்த 6 நாட்களாக வந்து, வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதில் நேற்று முன்தினம் மீண்டும் விமான நிலையம் வந்த பயணிகளிடம் ஏர்ஏசியா விமான பணியாளர்கள் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது என கூறினர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.தொடர்ந்து நேற்று மீண்டும் 70 பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மலேசியாவில் இருந்து விசாகப்பட்டிணத்திற்கு ஏர்ஏசியா விமானம் வருகிறது. அந்த விமானத்தில் தங்களை அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது குறித்து உயரதிகாரிகளிடம் கலந்தாலேசித்து முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டது. இருப்பினும், மலேசியா பயணிகள் தங்களை எப்போது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பில் விமான நிலைய வளாகத்தில் காத்துகிடக்கின்றனர்.

Advertising
Advertising

Related Stories: