தஞ்சை கோர்ட்டில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுக்கப்படும்

தஞ்சை, மார்ச் 19: உயர் நீதிமன்ற உத்தரவின்படி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக வரும் 31ம் தேதி வரை தஞ்சை நீதிமன்றங்களில் அவசரமான மற்றும் ஜாமீன், முன்ஜாமீன் வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும். எனவே வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகள் யாரும் அவசர நிலை இல்லாத வழக்குகளுக்காக நீதிமன்றத்திற்கு வர வேண்டாம். இன்று (19ம் தேதி) முதல் வரும் 31ம் தேதி வரை நீதிமன்ற வளாகத்தில் உள்ள கேண்டீன் இயங்காது. மேலும் வழக்கறிஞர் சங்கம் இன்று முதல் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். இன்று முதல் நீதிமன்ற வளாகத்தின் மேற்குபுற வாயில் மட்டுமே திறந்திருக்கும். அதன் வாயிலில் கொரோனா நோய் தொற்று பரிசோதனைக்கு பின்னரே நீதிமன்ற அலுவலர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு தஞ்சை வழக்கறிஞர் சங்க செயலாளர் கீர்த்திராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories: