குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

தஞ்சை, மார்ச் 19: கும்பகோணத்தை சேர்ந்த வாலிபரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். கும்பகோணம் வட்டம் தாராசுரம் எலுமிச்சங்காபாளையம் கதர் காலனியை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் அருண்குமார் (எ) அருண் (28). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் எஸ்பி மகேஸ்வரன் பரிந்துரையின்பேரில் கும்பகோணம் தாலுகா வட்ட காவல் ஆய்வாளர் கருணாகரன் தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணம் மற்றும் இதர ஆவணங்களின் பேரில் அருண்குமாரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார். இதையடுத்து அருண்குமார், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertising
Advertising

மார்க்கெட்டை மூடுவதாக வதந்தி

தஞ்சை புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி தற்காலிக காய்கறி மார்க்கெட் மூடப்படவுள்ளது என வதந்தி பரவியது. இதனால் நேற்று காலை முதல் பொதுமக்கள் கூட்டம் மார்க்கெட்டில் காய்கறி வாங்க அலைமோதியது. ஆனால் காய்கறி மார்க்கெட், மளிகை மற்றும் மக்களுக்கு தேவையான அத்யாவசிய பொருட்கள் சந்தைகள், கடைகள் எக்காரணத்தை கொண்டும் மூடப்படாது என அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் கொரோனா மக்கள் மத்தியில் ஒருவித பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: