சுவாமிமலை வேளாண் கூட்டுறவு கடன் சங்க நகை பெட்டியை உடைத்து அதிகாரிகள் ஆய்வு பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு

திருவையாறு, மார்ச் 19: திருவையாறு அடுத்த காட்டுக்கோட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மனைவி ஜெயலட்சுமி (38). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் முத்துகிருஷ்ணன் இறந்து விட்டார். இதையடுத்து முத்துகிருஷ்ணன் சகோதரர் பூபாலகிருஷ்ணன், ஜெயலட்சுமி வீட்டுக்கு பக்கத்திலேயே குடியிருந்து வருகிறார். இந்நலையில் தினம்தோறும் மது குடித்து விட்டு வந்து ஜெயலட்சுமியிடம் பூபாலகிருஷ்ணன் தகராறு செய்வார். சம்பவத்தன்று மது குடித்து விட்டு ஜெயலட்சுமியை பூபாலகிருஷ்ணன் தாக்கினார். மேலும் வீ்ட்டை விட்டு வெளியே போகுமாறு ஜெயலட்சுமியை பூபாலகிருஷ்ணன் மனைவி பட்டுரோஜாவும் மிரட்டினார். இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தில் ஜெயலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். ரயில்களின் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதால் தஞ்சை ரயில் நிலையத்தில் முன்பைவிட கூட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. இருப்பினும் ஒரு சில பயணிகள் மட்டுமே முககவசம் அணிந்தவாறு பயணித்தனர்.

Advertising
Advertising

Related Stories: