நண்பரை தாக்கியவர் கைது

கும்பகோணம், மார்ச் 19: கும்பகோணம் அடுத்த வீரராகபுரம் மாதாகோயில் தெருவை சேர்ந்தவர் மார்ட்டின் (44). திருநறையூர் மேலத்தெருவை சேர்ந்தவர் பாபு (55). இருவரும் நண்பர்கள். கடந்த 16ம் தேதி பாபுவிடம் டிரைவராக வேலை பார்த்த ராமன் என்பவர் சம்பளம் கேட்டார். ஆனால் பாபு, குறைவாக சம்பளம் கொடுத்தால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து பாபுவிடம் மார்ட்டின் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாபு, நண்பர் மார்ட்டினை கற்களால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த மார்ட்டின், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசில் மார்ட்டின் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து பாபுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: