×

வெளிநாடுகளில் இருந்து பெரம்பலூர் திரும்பிய 33 பேருக்கு சிறப்பு மருத்துவ குழு தீவிர கண்காணிப்பு

பெரம்பலூர்,மார்ச் 19:வெளிநாடுகளில் இருந்து திரும்பிய பெரம்பலூர் மாவட் டத்தைச் சேர்ந்த 33 பேர்களுக்கு கொரோனா தொற்று சந்தேகம் ஏற்பட்டால் சிகிச்சைக்காக அழைத்து வர 24மணிநேரமும் தயார் நிலையிலுள்ள பிரத்தியேக ஆம்புலென்ஸ் மற்றும் நோய் தொற்றா கவச உடையுடன் மருத்துவர் குழு தயார் நிலையில் உள்ளனர். கொரோனா தொற்றுப் பரவல் கண்டறியப்பட்டுள்ள 72 நாடுகளில் இருந்து சொ ந்த ஊர்களுக்குத் திரும்பிவந்துள்ள பெரம்பலூர் மா வட்டத்தைச் சேர்ந்த 33 நபர்களை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா உத் தரவின் பேரில் பெரம்பலூ ர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணைஇயக்குநர் டா க்டர் கீதாராணி தலைமை யிலான சுகாதாரத்துறை யினர் சிறப்புக்குழு அமைத்து முழு வீச்சில் கண்காணித்து வருகின்றனர்.

28 நாட்கள் அவர்கள், அவரவர் வீடுகளிலேயே தங்கவைத்து, வெளியே செல்லாமல் அறிவுறுத்தப்பட்டு, தும்மும் போதும் இருமும்போதும் துணிகளைப் பயன்படுத்தி முகத்தை மூடிக்கொள்ளவும், திருமணம் காதுகுத்து, சினிமா போன்றவற்றிற் காக வெளியே செல்லவே ண்டாம் என அறிவுறுத்தி, தீவிரக் கண்காணிப்பில் வைத்துள்ளனர். அவர்களு டன் மிக நெருங்கிய உறவி னர்கள் வந்தால் கூட, “சோ சியல் டிஸ்டன்ஸ்” எனப்ப டும் ஒரு மீட்டர்தூர இடை வெளிக்கு அப்பால் இருந்து பேசிச்செல்ல வலியுறுத்தப் பட்டுள்ளது. இந்த 33 பேர்களுக்கு ஏதாவது கொரோனா தோற்று அறிகுறிகளான இருமலோ, சளியோ, காய்ச்சலோ அல்லது மூச்சுத் திணறலோ ஏற்பட்டால் அவர்களைப் பெ ரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று தீவிர சிகிச்சைக்கான பிரத்தியேக வார்டுக்கோ, அல்லது திருச்சியிலுள்ள கிஆபெ அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமை க்கப் பட்டுள்ள சிறப்புப் பிரி வுக்கோ கொண்டு செல்வதற்காக பயிற்சிபெற்ற மரு த்துவக் குழுவைக் கொண்ட 108 ஆம்புலன்ஸ் 24மணி நேரமும் பெரம்பலூர் மாவ ட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு அருகே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆம்புலென்ஸ் வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊர் திரும்பிய பெரம்பலூ ர் மாவட்டத்தைச் சேர்ந்த 33 நபர்களுக்கும், 28 நாள் கண்காணிப்பு முடியும்வரை வே றெந்த அவசரத் தேவைக் கும் பயன்படுத்தப்படாமல் கொரோனா வைரஸ் தொ ற்று பரவலைத் தடுக்கும் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த, நோய் பாதி த்தவரை எவ்வாறு அழைத்துச் செல்ல வேண்டுமென்று பிரத்தியேகமாக பயிற்சி பெற்ற மருத்துவக் குழுவினரோடு, உடல் முழுதும் மூடும்படி அணியக்கூடிய நோ ய் தொற்றா கவச உடை வசதியுடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப் பட்டுள் ளது. இந்த ஆம்புலென்சில் 2 மருத்துவ அலுவலர்கள் 12 மணிநேர ஷிப்டு அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவை தவிர இந்த 33 நபர்களுக்கு தொடர்புள்ள உற வினர்கள் யாருக்கேனும் கொரோனா தொற்று குறித்த அச்சம் ஏற்பட்டால், அவர்களை அம்மாபாளையம் வட்டார மருத்துவமனையில், அதற்கென அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக ‘கோரன்டைன் ரூம்’ என்ற அறையில் தங்க வைத்து 14 நாட்களுக்கு கண்காணி க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : team ,persons ,overseas ,Perambalur ,
× RELATED அடுத்த ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியை...