×

பெரம்பலூர் அருகே வாட்டர் கேனில் பனை கள் ஏற்றிச் சென்ற 2 பேர் கைது

பெரம்பலூர், மார்ச் 19: பெரம்பலூர் சப்இன்ஸ்பெ க்டர் காவல் வினோத்கண்ணன் நேற்று பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் கோ னேரிபாளையம் பைபாஸ் ரோட்டில் வாகனத் தணிக்கை செய்துகொண்டிருந்தார். அப்போது ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் தெற்குத் தெருவை சேர்ந்த பாலு மகன் மகேந்திரன் (27) மற்றும் லட்சுமணன் மகன் ரகுபதி(19) ஆகியோர் சுமார் 25 லிட்டர் தண்ணீர் கேனில், 10 லிட்டர் அளவிற்கு பனைமரத்துக் கள்ளு வைத்திருந்ததால் பிடிபட்டார். அனுமதியின்றி சட்ட விரோதமாக இறக்கப்பட்ட பனை மரத்துக் கள்ளை கொண்டு சென்றதால் இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Perambalur ,
× RELATED குடிநீர் குழாய் உடைந்து சாலையில் ஓடிய தண்ணீர்