×

கொரோனா தொற்று அச்சத்தால் வாலீஸ்வரர் கோயில் 31 வரை மூடல்-தொல்லியல் துறை

பெரம்பலூர், மார்ச் 19: பெரம்பலூர்மாவட்டம், வேப் பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புகழ்பெற்ற அருள்மிகு வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. சோழ வம்சத்தை சேர்ந்த பராந்த கச் சோழன் ஆட்சிகாலத்தில் கிபி 9ம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி, 10ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டி முடிக்கப்பட்ட இக்கோவில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட் டிலும், இந்துசமய அறநி லையத்துறை பராமரிப்பிலும் உள்ளது. இராமாயண காலத்தில் சிவபக்தனான வாலி இங்குதான் சிவனை பூஜித்து வழிபட்டதாக கூறப்படுகிறது. வாலியை ராமன் மறைந்திருந்து கொன்ற இடம் என்பதால் வாலிகண்டபுரம் எனவும் கண்டீரக் கோ என்ற மன்னன் இப்பகுதியை தலைமையிடமாக கொண்டு ஆட்சிபுரிந்ததால் கண்டீரபுரம் எனவும் அழைக்கப்பட்டதாக ஆதாரங்கள் உள்ளன.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்ப தற்காக இந்திய அரசு பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் விளையாட் டு மைதானங்கள், பள்ளி கல்லூரிகள் பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றை 31ம்தேதி வரை மூடுவதற்கு உத்தரவிட்டதோடு பொதுக் கூட்டங்கள் பேரணிகள் ஊர்வலங்கள், பார்கள் நடத்த 31ம் தேதி வரை தடையும் விதித்துள்ளது. இதேபோல் பொதுமக்கள் பக்தர்கள் அதிகம் கூடக்கூடிய பிரசித்தி பெற்ற கோவில்களுக் கும் கடுமையான விதிக ளைப் பிறப்பித்துள்ளது.

இதன் காரணமாக ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் மார்ச் 31ம் தே தி வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது போல், பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வாலிகண்டபுரம் அருள்மிகு வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் திருக் கோவில், மார்ச் 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சென் னை வட்டத்தை சேர்ந்த தொல்லியல் துறை கண்காணிப்பாளர் சார்பில் வெ ளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸிற்கு எதிரான முன்னெச்சரிக்கை நட வடிக்கை காரணமாக இந்த நினைவு சின்னம் மார்ச் 31ம்தேதி வரை மூடப்படுகி றது என வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில் முன்பு மூடப்பட்டுள்ள, இரும்பு நுழைவாயில் முன் டிஜிட்டல் பேனரில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Valeeswarar Temple ,
× RELATED உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யாததால்...