×

கொரோனா தடுப்புக்காக கலெக்டர் உத்தரவு ஊராட்சி தலைவர்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம்

தா.பழூர், மார்ச் 19: தா.பழூர் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகிர் உசேன், பஞ்சாபிகேசன் ஆகியோர் கொரோனா விழிப்புணர்வு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து விளக்கம் அளித்தனர். அப்போது அனைத்து கிராமங்களிலும் வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர். இதில் 33 ஊராட்சிகளில் இருந்து ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார தணிக்கை அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துலட்சுமி, செல்வி, தமிழ் ஒலி, செந்தில்குமார் கலந்து கொண்டனர்.

Tags : Coroner Virus Awareness Meeting ,Colonel Prevention Collector's Ordinance Leaders ,