×

கலெக்டர் வேண்டுகோள் ஆவுடையார்கோவில் அருகே சட்டவிரோதமாக கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

அறந்தாங்கி, மார்ச்19: ஆவுடையார்கோவில் தாலுகா வௌ;ளாளவயல் விலக்கு அருகே சிலர் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்துவதாக ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங்கிற்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின்பேரில், தாசில்தார் தலைமையில், ஆவுடையார்கோவில் வட்ட வழங்கல் அலுவலர் சக்கரபாண்டியன், ஆர்.ஐ ஜபருல்லா, கிராம நிர்வாக அலுவலர் நாகராஜன் மற்றும் கிராம உதவியாளர்கள் அப்பகுதிக்கு சென்றபோது, இருசக்கர வாகனத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி சென்றவர்கள் அரிசி மூட்டைகளை கீழே தள்ளிவிட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடி விட்டனர். உடனே வருவாய்த்துறையினர் 11 சிறிய மூட்டைகளில் இருந்த 500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Tags : collector ,Oudayariko ,
× RELATED 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்