×

வருவாய்த்துறை அதிரடி தனியார் மதுபான தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்ற பட்டதாரி பெண் மாயம் தந்தை போலீசில் புகார்

கந்தர்வகோட்டை, மார்ச்19: கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டையில் இயங்கி வரும் தனியார் மதுபான தயாரிப்பு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த பட்டதாரி பெண் மாயமானார். அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கந்தர்வகோட்டை அருகே பல்லவராயன்பட்டி கிராமத்தை சோ்ந்தவர் லட்சுமணன்(60). இவரது மகள் சர்மிளா(26) .எம்பிஏ பட்டதாரி. இவர் கல்லாக்கோட்டையில் உள்ள தனியார் மதுபான தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். கடந்த 13ம் தேதி வீட்டை விட்டு தொழிற்சாலைக்கு வேலைக்கு போனவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் லட்சுமணன் கொடுத்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முதல் கட்ட விசாரனையில் தனியார்மதுபான தயாரிப்பு தொழிற்சாலையில் சர்மிளா உடன் பணியாற்றும் ஊழியர் காதல் காரணமாக கடத்தி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Revenue Action Private Liquor Factory ,
× RELATED பெண்ணிடம் வழிப்பறி