×

மணல் கடத்திய 2 பேர் கைது

வில்லியனூர், மார்ச் 19:   வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிள்ளையார்குப்பம் சங்கராபரணி ஆற்றில் நேற்று முன்தினம் இரவு 2 நபர்கள் இருசக்கர வாகனத்தில் மணல் கடத்துவதாக பத்துக்கண்ணு பீட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கு தனித்தனி பைக்கில் மணல் கடத்திய இருவரை மடக்கி பிடித்தனர். காவல்நிலையம் கொண்டு வந்து விசாரித்தபோது அவர்கள் பிள்ளையார்குப்பம் சக்திவேல் (25), அய்யப்பன் (32) என தெரியவந்தது. போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடத்தல் மணலுடன் இரண்டு பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags :
× RELATED இரண்டு வாரங்களில் 27 ரவுடிகள் கைது