×

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்

புதுக்கோட்டை, மார்ச் 19: தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரி தமிழ்நாடு தவுஹீத் ஜமாத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமை வகித்தார். மாநில தலைவர் அப்துர் ரகுமான், மாவட்ட செயலாளர் முகம்மது மீரான், பொருளாளர் முகம்மது பாரூக் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பெண்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது 100 அடி நீள தேசியக்கொடியை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். இந்த போராட்டத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை.

Tags :
× RELATED குடியுரிமை திருத்த சட்ட போராட்ட மேடையில் நடந்த திருமணம்