புகையிலை பொருட்கள் விற்ற 10 பேர் மீது வழக்கு

உளுந்தூர்பேட்டை,  மார்ச் 19: உளுந்தூர்பேட்டை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் எழிலரசி உத்தரவின்  பேரில் சப்இன்ஸ்பெக்டர்கள் உளுந்தூர்பேட்டை அகிலன், எலவனாசூர்கோட்டை  மாணிக்கம், எடைக்கல் சேகர் மற்றும் போலீசார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட  பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிராமப்புறங்கள்  மற்றும் நகரப்பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் பதுக்கி வைத்து தடை  செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 10 பேர்  மீது வழக்கு பதிந்தனர். மேலும் அவர்களது கடைகளில் இருந்து ரூ.3 ஆயிரம்  மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>