×

செஞ்சியில் நாளை வாரச்சந்தை நிறுத்தம்

செஞ்சி, மார்ச் 19: செஞ்சியில் கொரோனா வைரஸ் எதிரொலியால் செஞ்சியில் நாளை நடைபெறும் வாரச்சந்தை நிறுத்தப்பட்டுள்ளது. செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் கூட்டம் நடந்தது. திண்டிவனம் கால்நடைத்துறை உதவி இயக்குனர், செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலர் அறவாழி, செஞ்சி பேரூராட்சி செயல் அலுவலர் தெய்வீகன், செஞ்சி காவல் உதவி ஆய்வாளர் சங்கரசுப்பரமணியன் மற்றும் செஞ்சி வாரச்சந்தை ஏற்பாட்டாளர்கள் ஆகியோருடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வாரச்சந்தைக்கு வெளியூர் வியாபாரிகள், உள்ளூர் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் கொரோனோ வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செஞ்சியில் நாளை (20ம் தேதி) நடைபெறும் வாரச்சந்தையை நிறுத்தி வைப்பது எனவும், 31.03.2020க்கு பின்னர் நிலைமைக்கு ஏற்ப வாரச்சந்தை நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து தரப்பினர் ஒப்புதலோடு முடிவு எடுக்கப்பட்டது.

Tags : weekend stop ,
× RELATED செஞ்சி எம்எல்ஏ மனைவி, மகனுக்கு கொரோனா