×

தமிழியல் துறையில் அறக்கட்டளை துவக்கம்

சிதம்பரம், மார்ச் 19:  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தமிழியல் துறையில் கோவை  ரூட்ஸ் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர், தொழிலதிபர் கவிஞர் கவிதாசன் ரூ 10  லட்சத்தில் மகாகவி பாரதியார், சிந்தனைக் கவிஞர் கவிதாசன் என்ற பெயரில்  அறக்கட்டளையை நிறுவினார். அதன் தொடக்கவிழாவும், சிறப்புச் சொற்பொழிவும்  தமிழியல் துறையில் நடந்தது.

தமிழியல் துறை தலைவர் பேராசிரியர் வெங்கடேசன் வரவேற்றார். இந்திய  மொழிப்புல முதன்மையர்  பேராசிரியர்  முத்துராமன் முன்னிலை வகித்தார்.  பாரதி ஓர் ஆச்சரியம் என்ற தலைப்பில் சென்னை வானொலி நிலைய முன்னாள்  இயக்குநர் கவிஞர் கமலநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.  பேராசிரியர் திருவள்ளுவன், இணைப் பேராசிரியர் நெல்லையப்பன் மற்றும்  தமிழ்த்துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Tags : Foundation ,Tamilnadu ,
× RELATED புதிதாக உருவாக்கப்பட்ட...