×

31ம் தேதி வரை சுற்றுலா பயணிகள் அனுமதி இல்லை குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் நாகை, மயிலாடுதுறையில் நடந்தது

நாகை,மார்ச் 19: மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் நாகை, மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து அவுரித்திடல் அருகே தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செய்யது அலி நிஜாம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அல்ஆதில், மாவட்ட பொருளாளர் சவுகத் ஹுசைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மத்திய அரசு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை வரும் ஏப்ரல் மாதம் தொடங்குவதாக அறிவித்துள்ளது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், மாநில மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு அகதி பட்டியலில் இணைக்கப்படுவார்கள். இதை ஆதரித்தவர்கள் கூட இதற்கு எதிராக குரல் கொடுத்தும், சட்டமன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றியும் வருகின்றனர். ராஜஸ்தான், பஞ்சாப், டில்லி, மேற்குவங்கம், மத்திய பிரதேசம், தெலுங்கானா, கேரளா, ஆந்திரா, பாண்டிச்சேரி, பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களில் மாநில மக்களின் உரிமையை காப்பதற்காக அந்ததந்த சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசின் குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றிக்கு எதிராக தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை:
நாகை வடக்கு மாவட்டம் சார்பாக மயிலாடுதுறையில் சிறை நிரப்பும் போராட்டம் மாவட்ட தலைவர் பஹ்ரூதின் தலைமையில் நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்றது. 100க்கும்மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 3 மணிநேரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வட்ட செயலாளர் பஹ்ரூதின் மாவட்ட பொருளாளர் ஜெகபர் சாதிக் மாவட்ட துணை தலைவர் அசரப் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadu ,demonstration ,Dawheed Jama'at ,civilians ,
× RELATED 28ம் தேதி ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆதரவு