×

சேதமடைந்த சுகாதார நிலையம் மருத்துவமனை கட்டிடங்கள்

பண்ருட்டி,  மார்ச் 19: பண்ருட்டி அருகே மருங்கூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார  நிலைய மருத்துவமனையில் சொரத்தூர், முத்தாண்டிகுப்பம்,  பேர்பெரியான்குப்பம், வல்லம், காட்டுகூடலூர், புலவன்குப்பம் உள்ளிட்ட  50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் சிகிச்சை பெற்று  வருகின்றனர். இந்த மருத்துவமனை  கட்டிடங்கள் கட்டப்பட்டு 40 வருடத்திற்கு மேலாகிறது. புதிய கட்டிடங்கள்  கட்டப்படவில்லை. . போதிய அடிப்படை  வசதிகளும் இல்லை, இந்த கட்டிடத்தின் எதிரில் உள்ள கட்டிடங்கள்  மருத்துவர்களின் குடியிருப்புகளாக கடந்த 30 வருடத்திற்கு முன்பு  பயன்படுத்தப்பட்டு
வந்தது. ஆனால் தற்போது யாருமே பயன்படுத்தாத நிலையில்  மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.

இதன் காரணமாக அவசர சிகிச்சை பெறும்  நோயாளிகள் உரிய மருத்துவர்கள் இல்லாததால் பண்ருட்டி, கடலூர் அரசு  மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். எனவே பழுதடைந்துள்ள அனைத்து கட்டிடங்களையும் அகற்றிவிட்டு தரமான புதிய  கட்டிடங்களை கட்டி அனைத்து சிகிச்சைகளும் பெறும் வகையில் நவீன  மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைதது கிராம மக்கள்  எதிர்பார்க்கின்றனர்.

Tags : Health Center Hospital Buildings ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 20...