×

வேதாரண்யத்தில் கொரோனா விழிப்புணர்வு பேரணி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

வேதாரண்யம், மார்ச் 19: வேதாரண்யத்தில் கொரோனா விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுசூழல் சார் மன்றம் சார்பாக கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. பேரணிக்கு பள்ளி தலைமையாசிரியர் பொறுப்பு சுவாமிநாதன் தலைமை வகித்தார். பேரணி தோப்புத்துறை முக்கிய வீதிகள் வழியாக கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி மாணவர்கள் சென்றனர். பேரணியில் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கன்னையன் பள்ளி ஆசிரியர்கள் ரெங்கசாமி, காசிநாதன், அசோகன், தம்பிராஜன், பொய்யாமொழி பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கலந்துகொண்டனர். பொதுமக்களுக்கு மாணவர்கள் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Tags : Corona Awareness Rally Student and Students Participation ,Vedanta ,
× RELATED ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை :...