×

கொள்ளிடம் அருகே செங்கல் சூளை தொழிலாளி மாயம்

கொள்ளிடம், மார்ச் 19: கொள்ளிடம் அருகே செங்கல் தொழிலாளி மாயமானதால் மனைவி போலீசில் புகார் செய்துள்ளார். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கீரங்குடி கிராமம் அண்ணா நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி(55). தொழிலாளி. இவர் கடந்த 14ம் தேதி அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்து அப்பகுதியில் உள்ள டீ கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வந்தார். ஆனால் இதுவரை வீடு திரும்பவில்லை. அனைத்து உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் தேடியும் தட்சிணாமூர்த்தியை காணவில்லை. இது குறித்து தட்சிணாமூர்த்தியின் மனைவி கவுசல்யா(50) கொள்ளிடம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றார். காணாமல் போன தொழிலாளி தட்சிணாமூர்த்தி பணம் கொடுக்கல் வாங்கல் சம்மந்தமாக செங்கல் சூளை உரிமையாளர்கள் யாராவது திடீரென கடத்தி சென்று விட்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : brick kiln worker ,
× RELATED மேஜிக் செய்யும் ‘மிராக்கில்’!