×

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து காய்கறி சந்தையில் துண்டு பிரசுரம் விநியோகம்

சீர்காழி, மார்ச் 19: சீர்காழி அருகே மங்கைமடம் காய்கறி சந்தையில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் விழா வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ராஜ்மோகன் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் வியாபாரிகளுக்கும் காய்கறிகள், பழங்கள் வாங்க வருபவர்களுக்கும் கொரோனா வைரஸ் காய்ச்சலை பற்றியும் அதன் அறிகுறிகளையும் , கை கழுவும் முறை பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் சீர்காழி ஊராட்சி ஒன்றிய ஆனையர் ரெஜினாரானி, மருத்துவ அலுவலர் டாக்டர்.பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன், கீழசட்டநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் துரைராஜ், சுகாதார ஆய்வாளர்கள் துரை கார்த்திக், ரெங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED புதிய பேருந்து நிலையத்தில் இயங்கும்...