×

கொள்ளிடம் ஒன்றியத்தில் 42 ஊராட்சிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரம்

கொள்ளிடம், மார்ச் 19: கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளிலும் கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரம் அடைந்துள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் சுற்றுபுற பகுதியில் கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணியை ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் துவக்கி வைத்தார். ஒன்றிய ஆணையர் சரவணன் பிடிஓ இளங்கோவன் ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரகாஷ் கூறுகையில், கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளிலும் கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பற்றி யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. அனைவரும் சுத்தம் சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும். மருத்துவர்கள் ஆலோசனையின் படி கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து தண்ணீரில் குளோரின் உரிய அளவு கலந்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டிகளை பராமரிக்க தவறினால் சம்மந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : Union ,
× RELATED காவிரி குடிநீர் திட்டத்தில் அனைத்து...